வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

அக்கினியை ஊற்றுங்கப்பா

அக்கினியை ஊற்றுங்கப்பா
உம் அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா - 2

என் பாத்திரம்  நிரம்பி நிரம்பி  வழிய-2
எங்கள் மேலே  ஊற்றுங்கப்பா - 2

ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உம்    வல்லமையை-2
தாகத்தோடு கேட்கின்றேன்
ஊற்றுமையா -  என் பாத்திரம்....

பெந்தேகோஸ்தே  நாளில் அன்று ஊற்றினீரே
எந்தன் மேலே இந்த  வேளை ஊற்றிடுமே - 2   ஊற்றும்...

நீச்சல் ஆழம் கொண்டு சென்று  நீந்த
செய்வீரே
நீந்தி நீந்தி மூழ்க என் மேல் ஊற்றிடுமே
- ஊற்றும் ஊற்றும்...

மாம்சமான யாவர் மேலு‌ம் ஊற்றுவேன் என்றீர்
மாம்சமான எந்தன் மேலே  ஊற்றிடுமே-2
ஊற்றும் ஊற்றும் உம்...

அக்கினியை  போட வந்தேன்  என்று சொன்னீரே
பற்றி எரிய எந்தன் மேலே  ஊற்றிடுமே-2
ஊற்றும் ஊற்றும் உம்...