![]() |
பாபிலோனிய நகரத்தின் தெய்வத்திற்கு கட்டப்பட்ட சிகுரத் |
பாபிலோனியர்களுக்கு அனேக தெய்வங்களை வைத்திருந்தார்கள். சுமேரியவிலிருந்து சில கடவுள்கள், அக்காடியாவிலிருந்து சில கடவுள்கள், மலைதேசங்களிலிருந்து சில கடவுள்களை அவர்கள் தங்களது கடவுள்களாக வைத்திருந்தார்கள். இந்தக்கடவுள்களின் தேவைகளும் ஒவ்வொன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தது. அதிகமான கடவுள்கள் பாபிலோனியர்களை அச்சுறுத்தும் கடவுள்களாகவே இருந்தன. அவர்களும் கடல், மண்;, மின்னல், இடி, பாலைநிலம், தெய்வம், வெளிச்சம், இப்படி பல இயற்கைகளுக்கென்று ஒவ்வொரு கடவுள்களை வைத்திருந்தனர். இவைகளைத்தவிர்த்து நகரத்துக்குரிய கடவுள்களும் இருந்தனர்.
பாபிலோனியர்கள் சாஸ்திரங்களிலே நம்பிக்கையுள்ளவர்கள், அவர்கள் கிரகங்களை கணித்து கடவுளின் செயல் என்று செயற்பட்டார்கள். பாபிலோனிய அநேக தெய்வங்கள் வானத்திலுள்ள கிரங்களே: சின் (சந்திரன்), ஷமாஷ்(சூரியன்), இஷ்தார்(வியாழன்).
சில முக்கியமான பாபிலோனிய தெய்வங்கள்:
அனு: மேல் வானத்தின் தெய்வம்
மர்டக்: பாபிலோனின் தேசியக்கடவுள்
தியாமத்: வலுசர்ப்ப தெய்வம் (பெண்)
கிங்கு: தியாமத் தெய்வத்தின் புருஷன்
என்லில்: காலநிலைகளின் தெய்வம்
நபு: கலைத்தெய்வம்
இஷ்தார்: காதல் தெய்வம் (பெண்)
எனுர்தா: யுத்தத்தின் தெய்வம்
அன்ஷார்: வானத்தின் தந்தை
ஷமாஷ்: சூரியன், நீயாயாதிபதி தெய்வம்
அஷீர் (அசூர்): அசீரியர்களின் தேசியக்கடவுள்
கிஷார்: உலகத்தின் தந்தை
மர்டக்: பாபிலோனின் தேசியக்கடவுள்
தியாமத்: வலுசர்ப்ப தெய்வம் (பெண்)
கிங்கு: தியாமத் தெய்வத்தின் புருஷன்
என்லில்: காலநிலைகளின் தெய்வம்
நபு: கலைத்தெய்வம்
இஷ்தார்: காதல் தெய்வம் (பெண்)
எனுர்தா: யுத்தத்தின் தெய்வம்
அன்ஷார்: வானத்தின் தந்தை
ஷமாஷ்: சூரியன், நீயாயாதிபதி தெய்வம்
அஷீர் (அசூர்): அசீரியர்களின் தேசியக்கடவுள்
கிஷார்: உலகத்தின் தந்தை
பாபிலோனிய நகரத்தின் தெய்வத்திற்கு கட்டப்பட்ட சிகுரத்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக